எவ்.ஏ. கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் சம்பியன் அணியைத் தீர்மானிப்பதற்கான, தொடரின் இறுதிப் போட்டி இன்று சுகததாச விளையாட்டரங்கில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் நடப்புச் சம்பியன் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழக அணியும் ஜாவா லேன் விளையாட்டுக் கழக அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு எவ்.ஏ. கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் முற்றிலும் மாறுபட்ட இரு அணிகள் சம்பியன் கனவுடன் மோதவிருக்கின்றன.
பலமிக்க இராணுவப்படை அணியானது டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் சோபிக்கத் தவறிய போதிலும், பலரும் எதிர்பார்த்ததைப் போன்றே இத்தொடரில் தனது சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் போராடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஜாவா லேன் அணியோ டயலொக் சம்பியன்ஸ் தொடரில் அடைந்த ஏமாற்றத்திற்கு ஈடு செய்யும் வகையில் சற்று முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மிகவும் சிறப்பான ஆட்டத்துடன் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அதேவேளை இன்றைய போட்டியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஜாவாலேன் கழகத்தின் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப் போம் எவ்.ஏ. கிண்ணத்தை வெல்லப் போவது யார் என்று.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM