அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை நீடிக்க தீர்மானம்

Published By: Digital Desk 2

20 Dec, 2024 | 10:43 AM
image

அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட  கால அவகாசம்  2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும். 

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீடிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று வியாழக்கிழமை (19) தெரிவித்திருந்தார்.

இதன்படி, அரிசி இறக்குமதியை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் 24ஆம் திகதி வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரிசி ஏற்றுமதிக்கு அரசாங்கம் வழங்கிய கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமை  (20) நள்ளிரவு 12 .00 மணியுடன் நிறைவடைகிறது.

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிக்கப்படாவிட்டால், இன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பை மீண்டும் ஏற்றுமதி செய்ய நேரிடும் என சுங்க ஊடகப் பேச்சாளர் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

கடந்த 4ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியதையடுத்து நேற்றைய தினம் பிற்பகல் வரை தனியார் துறையினர் 35,600 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளனர்.

அந்த அரசி தொகையில் சுமார் 20,000 மெற்றிக் தொன் நாட்டரிசியும் , மேலும் 16,000 மெற்றிக் தொன் சிவப்பரிசியும் இருப்பதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தால் முன்பதிவு செய்யப்பட்ட 52,000 மெட்ரிக் தொன் அரிசி இருப்பு துறைமுகத்திற்கு வர உள்ளது.

மேலும், அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் ஊடாக சதொச நிறுவனத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட 10,400 மெற்றிக் தொன் அரிசி ஏற்கனவே சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34
news-image

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய,...

2025-03-24 22:07:01
news-image

நாடளாவிய ரீதியில் 6 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 19:18:53
news-image

மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் மின்சக்தி...

2025-03-24 16:41:13
news-image

குருணாகலில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் 10...

2025-03-24 20:05:45