தாய்­லாந்­தி­லி­ருந்து 202 பய­ணி­க­ளுடன் டோஹா நோக்கி பய­ணித்துக் கொண்­டி­ருந்த கட்டார் விமான சேவைகள் நிறு­வ­னத்­திற்குச் சொந்­த­மான “கிவ். ஆர்.841”   என்ற விமா­னத்தில் ஏற்­பட்ட திடீர் கோளாறு கார­ண­மாக அவ்­வி­மானம் நேற்­றி­ரவு 8.30 மணி­ய­ளவில்  கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்வதேச விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கப்­பட்­டது. 

குறித்த விமா­னத்­திற்குள் தீ ஏற்­படும் அபாய நிலை ஏற்­பட்­ட­த­னா­லேயே அவ்­வி­மானம் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த விமானம் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் தரை­யி­றங்கும் விமானம் அல்ல. எனினும் டோஹா நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருந்­த­போது இலங்கை வான்­ப­ரப்பில் வைத்து விமா­னத்­திற்குள் தீ அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. 

ஆகவே அபாய நிலையை கருத்­திற்­கொண்ட வி­மானி பாது­காப்­பான முறையில் விமா­னத்தை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கியுள்ளார்.

கட்­டு­நா­யக்க விமா­ன­நி­லை­யத்தில்  அவ­சரநிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு தீய­ணைப்பு வாகனம் மற்றும் அம்­பி­யூலன்ஸ் வண்­டி­க­ளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 202 பயணிகளுடன் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.