மட்­டக்­க­ளப்பு காத்­தான்­கு­டியில் டெங்கு காய்ச்­ச­லினால் மற்­று­மொரு சிறுமி நேற்று முன்தினம் இரவு உயி­ரி­ழந்­துள்ளார்.

புதிய காத்­தான்­குடி 3ஆம் குறிச்சி சபீனா வீதியைச் சேர்ந்த 4 வயதான பாத்­திமா ஹிபா எனும் சிறுமி டெங்கு காய்ச்­ச­லினால் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அங்கு உயி­ரி­ழந்­துள்­ள­தாக காத்­தான்­குடி சுகா­தார வைத்­திய அதி­காரி அலு­வ­லகம் தெரிவித்­தது.

குறித்த சிறுமி டெங்கு காய்ச்­ச­லினால் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த இரு தினங்­க­ளுக்கு முன்னர் கொழு­ம்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டார் எனினும் சிகிச்சை பலனின்றி உயி­ரி­ழந்­துள்ளார்.

காத்­தான்­கு­டியில் கடந்த ஜன­வரி மாதம் ­முதல் இன்று வரை மூன்று சிறுமிகள் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.