இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'மிஸ்டர். பாரத் ' படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு

Published By: Digital Desk 2

19 Dec, 2024 | 06:45 PM
image

வலையொளி எனும் சமூக ஊடக தளத்தில் பிரபலமான நடிகர் பாரத் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மிஸ்டர். பாரத் 'எனும் திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

வலையொளி எனும் சமூக ஊடக தளத்திற்கான காணொளிகளை இயக்கிய இயக்குநர் நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகும் 'மிஸ்டர். பாரத்' எனும் திரைப்படத்தில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப் ,ஆர். சுந்தர்ராஜன் , லிங்கா,  ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் முனி ராஜ் இசையமைக்கிறார். 

அவல நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை ஜி ஸ்குவாட் எனும் நிறுவனம் சார்பில் பிரபல நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ்- ஜெகதீஷ் பழனிசாமி , சுதன் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தைப் பற்றிய அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இடம்பெறும் காட்சிகள் இணைய தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால் இந்த காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right