ஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் புதிய பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

19 Dec, 2024 | 06:45 PM
image

தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் 'காதலிக்க நேரமில்லை' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'லாவெண்டர் நேரமே..' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் 'காதலிக்க நேரமில்லை ' எனும் திரைப்படத்தில் ஜெயம் ரவி , நித்யா மேனன் , யோகி பாபு, வினய் ராய்,  டி. ஜே. பானு, ஜான் கொக்கன், லால் ,லக்ஷ்மி ராமகிருஷ்ணன், மனோ, வினோதினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேவ்மிக் ஆரே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைப்புயல்' ஏ .ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தில் இடம்பெற்ற 'என்னை இழுக்குதடி ..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகி பனிரெண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ' லாவண்டர் நேரமே நிழலாக நொடியில் மலரும் நானோ..' என தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் மசூக் ரகுமான் எழுத, பின்னணி பாடகர் ஆர். கே. ஆதித்யா மற்றும் பின்னணி பாடகி அலெக்சாண்ட்ரா ஜாய் இணைந்து பாடியிருக்கிறார்கள். இசை புயலின் மயக்கும் மெல்லிசையில் காதலின் உணர்வை விவரிக்கும் இந்தப் பாடல் இளைய தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00
news-image

நடிகர் தேஜஷ் ராஜன் நடிக்கும் 'அமரம்'...

2026-05-07 14:38:54
news-image

சிவ கார்த்திகேயனுடன் இணைந்த பாக்யஸ்ரீ

2026-05-06 18:40:52
news-image

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி கார் விபத்தில்...

2026-05-06 05:20:33
news-image

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'பாலன்...

2026-05-05 18:01:45
news-image

ஜூன் மாதம் வெளியாகும் ராம் சரணின்...

2026-05-02 16:32:22
news-image

நடிகர் ஜெயராம் - ஊர்வசி இணைந்து...

2026-05-02 16:01:58
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நடிகர்...

2026-05-02 16:01:07
news-image

நடிகர் விதார்த் நடிக்கும் 'மூன்றாம் கண்'...

2026-05-02 15:57:57
news-image

நடிகர் விஜய் அண்டனி நடிக்கும் 'நூறு...

2026-05-02 15:48:59
news-image

நடிகர் பாரத் நடிக்கும் 'காவியக் காதல்'...

2026-05-02 15:48:18