முன்னாள் ஜனாதிபதிகளுக்கான இராணுவ பாதுகாப்பு நீக்கம்: தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலிக்க வேண்டும் - பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

Published By: Vishnu

19 Dec, 2024 | 06:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ராஜபக்ஷர்களை பழிவாங்கும் வகையில் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. டயஸ்போராக்கள் இன்றும் ராஜபக்ஷர்களுக்கு எதிராகவே செயற்படுகிறார்கள். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பை நீக்குவது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு முறையற்ற வகையில் குறைக்கப்பட்டுள்ளது. 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் கடுமையான தீர்மானங்களை எடுத்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உறுதியான தீர்மானத்தை எடுத்ததால் தான் இந்த நாட்டில் ஜனநாயகம் இன்றும் அமுலில் உள்ளது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வெற்றிப் பெற முடிந்தது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ள குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜபக்ஷர்களை பழிவாங்கும் நோக்கத்தில் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு, இராணுவ பாதுகாப்பை முழுமையாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் பாதுகாப்பு உறுதிப்பாட்டுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை ஒப்பிட முடியாது. டயஸ்போராக்களும், விடுதலை புலிகளின் பிரிவினைவாத கொள்கையுடையவர்களும் இன்றும் ராஜபக்ஷர்களுக்கு எதிராகவே செயற்படுகிறார்கள் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பை நீக்குவது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.செலவுகளை குறைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38