கந்தானையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு ; உதவியாளர் கைது

19 Dec, 2024 | 06:01 PM
image

கந்தானை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பேலியகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று புதன்கிழமை (18) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் காலி, இரத்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தானை பிரதேசத்திற்குக் கடந்த 13 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு துப்பாக்கி தாரிகள் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

போதைப்பொருள் கடத்தல் காரரான “கந்தானை கொன்ட ரஞ்சி” என்று அழைக்கப்படும் திசாநாயக்க முதியன்சேலாகே ரஞ்சித் குமார  என்பவரின் வீட்டின் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கி தாரிகளுக்கும் உதவி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். 

காலி, இரத்கம பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடையவர் ஆவார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கந்தானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38
news-image

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-12 11:42:41
news-image

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : ஒரே...

2026-04-12 11:29:19
news-image

நிலக்கரி தொடர்பான மேலதிக செலவுகளை நுகர்வோரிடமிருந்து...

2026-04-12 11:47:49
news-image

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு...

2026-04-12 10:44:49
news-image

விமான நிலையத்தில் அலங்கார செடிகள் கைப்பற்றல்:...

2026-04-12 10:40:56
news-image

புத்தாண்டு காலத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து...

2026-04-12 11:41:49
news-image

தெமட்டகொடை சமிந்தவை படுகொலை செய்ய சதி?...

2026-04-12 09:59:39