நாயை பொல்லால் தாக்கி கொலை செய்த சகோதரர்கள் இருவரும் பிணையில் விடுதலை

19 Dec, 2024 | 06:01 PM
image

காலி, அக்மீமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு முன்பாக இருந்த நாய் ஒன்றை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு காலி பிரதான நீதவான் இசுறு நெத்திகுமார இன்று வியாழக்கிழமை (19) உத்தரவிட்டுள்ளார்.

காலி பிரதேசத்தில் வசிக்கும் 34 மற்றும் 37 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொட.ர்பில் தெரியவருவதாவது, 

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சகோதரர்கள் இருவரும் காலி, அக்மீமன பிரதேசத்திற்கு கடந்த 11 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் சென்றுள்ள நிலையில் வீடொன்றிற்கு முன்பாக இருந்த நாய் ஒன்றை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். 

பின்னர், கொலை செய்யப்பட்ட நாயின் உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியதையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் நேற்று புதன்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரகரி ஏரி படகு சேவைகளை ஒழுங்குபடுத்த...

2026-04-20 12:51:46
news-image

கடலில் நீராடச் சென்ற நபர் நீரில்...

2026-04-20 12:49:39
news-image

1,200க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக...

2026-04-20 12:25:45
news-image

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல்...

2026-04-20 12:18:26
news-image

பலாங்கொடையில் நபரொருவர் அடித்துக் கொலை

2026-04-20 12:09:48
news-image

இந்திய வீடமைப்பு திட்டத்தை பார்வையிட்டார் இந்திய...

2026-04-20 12:08:08
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்...

2026-04-20 11:36:51
news-image

பயணிகள் பஸ்ஸில் மண்ணெண்ணெய் கடத்தல்: நடத்துனர்...

2026-04-20 10:46:52
news-image

புத்தாண்டு காலத்தில் மாகும்புர மத்திய நிலையத்தை...

2026-04-20 10:46:31
news-image

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் :...

2026-04-20 10:36:54
news-image

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை...

2026-04-20 10:43:59
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 608...

2026-04-20 10:11:35