அகத்திய மாமுனிவரின் ஜனன தினத்தை முன்னிட்டு இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்,  விழிப்புணர்வு நிகழ்வுகள் 

19 Dec, 2024 | 06:01 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

கத்திய மாமுனிவரின் ஜனன தினத்தை முன்னிட்டு இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை (19) மூதூர் - கங்குவேலி பிரதேசத்தில் நடைபெற்றது. 

இதனை நிலாவெளி - கோபாலபுரம் சித்த ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலை மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் இணைந்து நடத்தியிருந்தது.

அகத்திய ஸ்தாபன சிவன் ஆலயத்தில் அமையப்பெற்ற அகஸ்த்திய முனிவருக்கான பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமான இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு காலை 9 மணியிலிருந்து பகல் 2.30 மணி வரை நடத்தப்பட்டது. 

உடல் பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை, உடற்பருமன் அளவு போன்ற பல பரிசோதனைகளுடன் தொற்றாநோய் மற்றும் தொற்றும்நோய் தொடர்பான சித்த மருத்துவ ஆலோசனைகளுடன் மருந்துகளும் இலவசமாக இதன்போது வழங்கப்பட்டன.

இந்த மருத்துவ முகாமில் கோபாலபுரம் சித்த ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.நிரஞ்சன் உட்பட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட மாணவர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16