காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பட்டு மீயா” என்ற அனுர புஷ்பகுமார என்பவரின் சகாக்களுக்கும் “கரந்தெனிய சுத்தா“ என்பவரின் சகாக்களுக்கும் இடையிலேயே இவ்வாறு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, "பட்டு மீயா" என்பவரும் அவரது சகாக்களும் காயமடைந்துள்ளனர்.
காலி மீட்டியாகொடை பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி வீடொன்றில் வைத்து தந்தை மற்றும் மகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய சம்பவம் தொடர்பாக “பட்டு மீயா” மற்றும் அவரது மூன்று சகாக்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
“கரந்தெனிய சுத்தா“வின் சகாக்கள் “பட்டு மீயா” என்பவரை கொலை செய்ய தயாராக இருந்ததாகவும் அதற்கு உதவி புரியும் ஒருவரை இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காலி சிறைச்சாலையில், கரந்தெனிய சுத்தாவின் சகாக்கள் இருந்துள்ள நிலையில் கரந்தெனிய சுத்தாவின் சகாக்கள் "பட்டு மீயா" மற்றும் அவரது சகாக்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, "பட்டு மீயா" மற்றும் அவரது சகாக்கள் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM