(எம்.மனோசித்ரா)
டிஜிட்டல் அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பரிமாற்றம் செய்கின்ற ஒத்துழைப்புக்கள் தொடர்பாக இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தகவல் தொழிநுட்பத்தின் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்தில் முன்னணி வகிக்கின்ற இந்திய இலத்திரனியல் - அரச நிர்வாகம், நிதித் தொழிநுட்ப முறைமை, செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற துறைகளில் பெற்றுக் கொண்டுள்ள விசேட நிபுணத்துவ அறிவு பல்வித செயற்பாடுகள் மூலமாக இலங்கையில் டிஜிட்டல் அபிவிருத்திக்குப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை கிட்டியுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இந்தியாவின் இலத்திரனியல் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு இருதரப்புக்கும் இடையிலான ஆரம்ப உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
அதன்மூலம், டிஜிட்டல் அபிவிருத்தித் துறையில் அதிகாரிகளின் இயலளவு விருத்திக்கும் மற்றும் டிஜிட்டல் அபிவிருத்தித் தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் போது இரு நாடுகளுக்கிடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான இயலுமை கிட்டியுள்ளது.
அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM