(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
அரிசி உற்பத்தியாளர்கள் ஒருபுறம் மக்களை சுரண்டிப் பிழைக்கிறார்கள், மறுபுறம் அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அதிக வரியை அறவிட்டு பிழைக்கிறது. இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடுவது நியாயமற்றது. சந்தையில் அரிசி விலையை குறைக்க வேண்டுமாயின் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரிகளை குறைத்து அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதமளவில் நிவாரணம் வழங்குவதாக குறிப்பிடுகிறார். அரிசி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரிசி இறக்குமதிக்கான வரையறையை அரசாங்கம் தற்காலிகமாக நீக்கியுள்ளது. மறுபுறம் 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி பிரதான அரிசி உற்பத்தியாளர்களிடம் 5 தடவைகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அரிசி உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு அமைய அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
நாடு அரிசியின் விலை 230 ரூபா என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் சந்தையில் 250 ரூபாவுக்கே அரிசி விற்பனை செய்யப்படுகிறது. அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலும், சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசி உற்பத்தியாளர்களே அரிசியின் விலையை இன்றும் தீர்மானிக்கிறார்கள்.
தனியார் அரிசி இறக்குமதியாளர்கள் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கிறார்கள். இந்திய விலைக்கு அமைய ஒரு கிலோகிராம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு இலங்கை நாணய அலகில் 150 ரூபாவை செலவிடுகிறார்கள். அத்துடன் இறக்குமதி செய்யப்படும் ஒருகிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடப்படுகிறது.
வரி உள்ளடங்களாக ஒரு கிலோகிராம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தகர்கள் 215 ரூபாவை செலவிட நேரிடும். இவ்வாறான நிலையில் அவர்களால் எவ்வாறு 220 ரூபாவுக்கு அரிசியை விற்பனை செய்ய முடியும்.
அரிசி உற்பத்தியாளர்கள் ஒருபுறம் மக்களை சுரண்டிப் பிழைக்கிறார்கள், மறுபுறம் அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அதிக வரியை அறவிட்டு பிழைக்கிறது. இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடுவது நியாயமற்றது. சந்தையில் அரிசி விலையை குறைக்க வேண்டுமாயின் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM