சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்கு சென்ற இரண்டு இலங்கையர்கள் தொடர்பில் எந்த தகவலும் அறியவில்லை என அவர்களின் உறவினர்களால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை  தேடிப்பார்ப்பதற்கு பணியகம் பொது மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றது.

அதனடிப்படையில் சவூதி அரேபியாவுக்கு 2012 ஆம் ஆண்டு தொழிலுக்கு சென்ற பூண்டலு ஓயாவைச் சேர்ந்த பெரியசாமி முத்து மாரியம்மா மற்றும் 2008ஆம் ஆண்டு தொழிலுக்கு சென்ற பிபில, மெதகமயைச்சேர்ந்த டீ.எம்.கருணாவத்தி ஆகியோர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் பணியகத்தின் வெளிநாட்டு தொடர்பு பிரிவு 0114 379328 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பணியகம் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றது.