(நெவில் அன்தனி)
கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (19) நடைபெறவுள்ள அங்கரார்ப்பண லங்கா ரி10 சுப்பர் லீக் இறுதிப் போட்டியில் ஜெவ்னா டைட்டன்ஸ் அணியை எதிர்த்தாட ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணி தகுதிபெற்றுக்கொண்டது.
முதலாவது தகுதிகாண் போட்டியில் தோல்வி அடைந்த ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணியும் நீக்கல் போட்டியில் வெற்றிபெற்ற கோல் மார்வல்ஸ் அணியும் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற இரண்டாவது தகுதிகாண் போட்டியில் மோதியதில் ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணி 4 விக்கெட்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கோல் மார்வல்ஸ் அணி 10 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றது.
கோல் மார்வல்ஸ் அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. முதல் 3 வீரர்கள் களம் விட்டு வெளியேறியிருந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தது.
எனினும் அடுத்த நான்கு துடுப்பாட்ட வீரர்களும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.
மோவின் சுபசிங்க ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களையும் லஹிரு உதார, ஷக்கிப் அல் ஹசன் ஆகியோர் தலா 12 ஓட்டங்களையும் சமிந்து விக்ரமசிங்க 11 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்வரிசையில் ப்ரபாத் ஜயசூரிய 11 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ஏஷான் மாலிங்க 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தரிந்து ரத்நாயக்க 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய லக்ஷான் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இசுறு உதான 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணி 7 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
மொஹமத் ஷாஸாத் (0), ஷபிர் ரஹ்மான் (0) ஆகிய இருவரும் முதல் ஓவரில் ஆட்டம் இழந்தனர்.
எனினும் 22 ஓட்டங்களைப் பெற்ற குசல் பெரேராவுடன் 3ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களையும், 20 ஓட்டங்களைப் பெற்ற அணித் தலைவர் தசுன் ஷானக்கவுடன் 4ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களையும் ஷெவன் டெனியல் பகிர்ந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
ஷெவன் டெனியல் 36 ஓட்டங்களைப் பெற்றார்.
மொத்த எண்ணிக்கை 85 ஓட்டங்களாக இருந்தபோது தசுன் ஷானக்கவும் ஷெவன் டெனியலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து மொசாடெக் ஹொசெய்ன் (4) ஆட்டம் இழந்தார்.
ஆனால், வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 2 ஓட்டங்களை சஹான் ஆராச்சிகேயும் தனஞ்சய லக்ஷானும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸஹூர் கான் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM