(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடத்தப்பட்டுவரும் அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் விளையாட முதலாவது மற்றும் தோல்வி அடையாத அணியாக ஜெவ்னா டைட்டன்ஸ் தகுதிபெற்றுள்ளது.

பல்லேகலையில் இன்று புதன்கிழமை (18) நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில் ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணியை 39 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு ஜெவ்னா டைட்டன்ஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ஆரம்ப வீரர் குசல் மெண்டி ஸின் அபார துடுப்பாட்டமும் ட்ரவீன் மெத்யூவின் இரண்டாவது 4 விக்கெட் குவியலும் ஜெவ்னா டைட்டன்ஸ் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா டைட்டன்ஸ் 10 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.

டொம் கோஹ்லர் கெட்மோர், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 29 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கெட்மோர் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து குசல் மெண்டிஸுடன் 2ஆவது விக்கெட்டில் 24 ஓட்டங்களைப் பகிர்ந்த சரித் அசலன்க 17 ஓட்டங்களுடன் வெளியேறினர். (53 - 2 விக்.)
அதன் பின்னர் குசல் மெண்டிஸ், டொம் ஆபெல் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 25 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
டொம் ஆபெல் 12 பந்துகளில் 23 ஓட்டங்களைப் பெற்று 9ஆவது ஓவர் நிறைவில் சுயமாக ஆட்டம் இழந்து (Retired out) களம் விட்டகன்றார்.
கடைசி ஓவரில் களம் நுழைந்த அணித் தலைவர் டேவிட் வைஸ், 5 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டறி, 2 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 18 ஓட்டங்களைப் பெற்றார்.
மறுபக்கத்தில் வேகமாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 25 பந்துகளில் 2 பவண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 47 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ரன் அவுட் ஆனார்.
பந்துவீச்சில் இசுறு உதான, தரிந்து ரத்நாயக்க ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
125 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணி 9.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 85 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
அதிரடி ஆட்டக்காரர் குசல் பெரேரா (3) மீண்டும் பிரகாசிக்கத் தவறியதுடன் மொஹமத் ஷாஸாத் (0), அணித் தலைவர் தசுன் ஷானக்க (5) ஆகியோரும் ஆட்டம் இழக்க ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஷெவன் டெனியல் (13), சபிர் ரஹ்மான் (15) ஆகிய இருவரும் அணியைக் கட்டி எழுப்ப முயற்சித்த போதிலும் அது கைகூடவில்லை.
அவர்களைவிட இசுறு உதான (23), சஹான் ஆராச்சிகே (12) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
மிகத் துல்லியமாக பந்துவீசிய ட்ரவீன் மெத்யூ 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ப்ரமோத் மதுஷான் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM