நாடு முழுவதும் 16 காட்சியறைகளைக் கொண்டு இயங்கி வரும் இலங்கையின் முன்னணி ஆடை விற்பனையகத் தொடரான Fashion Bug, “பாராளுமன்ற சேவைச் சங்கம்” எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த க.பொ.த சாதாரண தரம், உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் செயற்பாட்டுக்கு அனுசரணை வழங்கியிருந்தது. 

ஜனவரி 1ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வின் மூலம் 2014ஃ2015 வருடத்தில் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தவர்களுக்கு கௌரவிப்புகளும் விருதுகளும் வழங்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் 400க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றிருந்தனர் என்பதுடன், இதில் மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

Fashion Bug பணிப்பாளரும், சிசு திரிமக நிகழ்ச்சித்திட்டத்தின் ஸ்தாபகருமான திரு. ஷபீர் சுபியன் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த சமூகப் பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தமை என்பது பெருமைக்குரிய விடயமாக அமைந்துள்ளது. நாளைய தலைவர்களாக இன்றைய குழந்தைகள் காணப்படுகின்றனர்.

தரம் வாய்ந்த கல்விக்கு அவர்கள் வாய்ப்பை பெற்றிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இன்றைய கால கட்டத்தில் கல்வி அதிகளவு செலவீனம் நிறைந்ததாக காணப்படுகிறது. இந்த புலமைப்பரிசில்கள் மூலமாக மாணவர்களுக்கு நிதி அழுத்தங்களிலிருந்து விடுபட்டு தமது கல்விச் செயற்பாடுகளை தொடர உதவியாக அமைந்திருக்கும்” என்றார்.

“தனியார்-பொது பங்காண்மைகள் மூலமாக எப்போதும் சமூகத்தின் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக கல்வித்துறையில் இந்த மேம்படுத்தல் பதிவாகியிருந்தது. சமூக பொறுப்புணர்வு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில்,இதுபோன்ற பல செயற்பாடுகளுக்கு எதிர்வரும் காலங்களிலும் பங்களிப்பு வழங்க தயாராகவுள்ளோம்” என மேலும்குறிப்பிட்டார்.

இது போன்ற செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்குவது Fashion Bug ஐ பொறுத்தமட்டில் புதிய விடயமல்ல. குறிப்பாக “தம்மிக கிதுல்கல” மையத்துக்கும் முன்னர் இது போன்ற அனுசரணைகளை வழங்கியுள்ளது. எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு கம்பனி அண்மையில் தனது சொந்த புலமைப்பரிசில் திட்டமான சிசு திரிமக என்பதையும் முன்னெடுத்திருந்தது.

மேலும், பாடசாலை மாணவர்களுக்கு ஆலோசனை (Counceling) வழங்கும் நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்திருந்தது. கல்வி அமைச்சுடன் இணைந்து 2016 இல் சகல மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது” என Fashion Bug இன் பதில் பொது முகாமையாளர் கலாநிதி. எஸ்.எச்.எம். ஃபராஸ் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதி சபாநாயகர் மற்றும் இலங்கை கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவருமான கௌரவ. திலங்க சுமதிபால பங்கேற்றிருந்ததுடன், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திரு. தம்மிக தசநாயக்க, பதில் செயலாளர் திரு. நீல் சிறிவர்தன மற்றும் பாராளுமன்றத்தின் உதவி செயலாளர் செல்வி. குஷானி ரோஹணதீர ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஃபஷன் பக் முன்னெடுக்கும் விருதை வென்ற சமூகப் பொறுப்புணர்வு திட்டமான சிசு திரிமக ஊடாக 20 பாடசாலைகளைச் சேர்ந்த 7000க்கும் அதிகமான மாணவர்கள் இதுவரையில் பயன்பெற்றுள்ளனர். 120 பாடசாலைகளின் 100,000 மாணவர்கள் எனும் இலக்கை எய்தும் வரையில் தொடர்ந்து இந்தத் திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1994ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக 4 பங்காளர்களுடன் ஆரம்பித்திருந்த Fashion Bug, ஆரம்பத்தில் 15 ஊழியர்களை மட்டுமே கொண்டிருந்தது. இன்று 16 காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன், இவற்றில் 1250க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் முன்னணி ஆடை அலங்கார விற்பனையகமாக திகழும் இந்த நிறுவனம், “வாழ்க்கைக்கு புது வடிவம்” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.