வாட்ஸ் அப் சமூக வலையமைப்பை வாங்கிய போது,தவறிழைத்துள்ளதாக கூறி பேஸ்புக் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் 186 கோடியே 57 இலட்சம் ரூபாவை (94 மில்லியன் யூரோ) அபராதமாக விதித்துள்ளது. 

உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், தகவல் பரிமாற்று வலையமைப்பான வாட்ஸ் அப் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு வாங்கியது. குறித்த உரிமை பதிவின் போது தவறான தகவல்களை வழங்கி பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்-அப்பை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மேலும் ஐரோப்பிய ஒன்றியம் நீதிமன்றம் ஒரு நிறுவனத்தை, மற்றொரு நிறுவனம் உரிமை படுத்தும்போது விரிவான தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் முறையாகவும், துல்லியமாகவும் தெரிவித்திருக்க வேண்டும் என  அறிவித்து, பேஸ்புக் நிறுவனத்திற்கு குறித்த அபராத தொகையை செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் அப்பை வாங்கியபோது சில தவறுகள் ஏற்பட்டது உண்மைதான், அவை வேண்டுமென்றே மேற்கொள்ளப்படவில்லை எனவும், தாம் பதிவு செய்த தகவல்களில் சில தவறுகள் தெரியாமல் இடம்பெற்றிருந்தன அதனால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.