ஹோமாகமவில் போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் 

18 Dec, 2024 | 12:58 PM
image

ஹோமாகம, பனாகொட, பெலதகொட, ரணவிருகம பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டின் மீது இன்று புதன்கிழமை (18) அதிகாலை இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச்  சூடு நடத்தியதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர். 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் வியாபாரியொருவரின் திட்டத்துக்கு அமைய இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இந்த சம்பவத்தின்போது வீட்டில் இருந்தவர்களுக்கு காயமேதும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். 

9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்களை ஏற்கும் திறன் கொண்ட பிஸ்டல் ரக துப்பாக்கியால் சந்தேக நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருப்பதாக முதற்கட்ட விசாரணைகளின்போது பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இரண்டு தோட்டாக்களையும் பயன்படுத்தப்படாத ஒரு தோட்டாவினையும் போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் முன் வீதியில் காணப்பட்டது என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23