யாழில் மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு !

18 Dec, 2024 | 11:52 AM
image

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி தட்டாதெரு சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகே மின்சாரம் தாக்கி பசு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (17) உயிரிழந்துள்ளது.  

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, 

யாழின் பிரதான பகுதியிலுள்ள  மின் விளக்கினை சுற்றி கொடிவகை தாவரம் ஒன்று படர்ந்து மின்சார கம்பிகளிலும்  சுற்றிப்பரவி உள்ளது.

இதனைப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரும் கவனிக்காது விட்டிருந்த நிலையில் நேற்று மின்ஒழுக்கினூடாக கொடி முழுவதும் மின்சாரம்  பாய்ந்துள்ளது.

இதன்போது எதேர்ச்சியாக குறித்த கொடியினை உணவாக உட்கொள்ள விளைந்த பசு மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

இதனை அவதானித்த குறித்த வீதியால் பயணித்தவர்கள் மற்றும் அருகில் இருந்த கால்நடை மருத்துவர்கள் என பலரும் குறித்த பசுவை காப்பாற்ற முற்பட்டனர். 

பசுவின் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தமையினாலும்   வீதியில் மழைநீர் தேங்கி நின்றமையினாலும் பசுவை காக்க முனைந்தவர்கள் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது.

எனவே அவர்கள் பசுவினை காக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்க நேரிட்டது. 

இது தினமும் பலரும் பயன்படுத்தும் பாதை என்பதனால் பசுவின் நிலை எவருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும் பெறுமதிமிக்க பசுவின் உயிர்பறிக்கப்பட்டமைக்கு உரிய அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் எனவும் தெரிவித்து பொதுமக்களும் அவ் வீதியால் பயணித்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த மின்சார சபையினர் மின்னை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  

போராட்டத்தில் ஈடுபட்டர்கள் மேலும் தெரிவிக்கையில்,  

குறித்த பகுதியில் மின்சார அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு மின்சாரசபையினர் தாம் பொறுப்பல்ல வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் யாழ்.மாநகர சபையே இதற்கு பொறுப்பு. 

தாம் துரித சேவை இலக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் எனவும் எனவே தம்மால் ஒரே பகுதியில் அதிக நேரம் தரித்திருக்க முடியாது எனவும் தெரிவித்த மின்சாரசபை அதிகாரிகள் அவ்விடத்தில் இருந்து விலகினர்.

எந்த அதிகாரிகளும் குறித்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காத நிலையில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள குறித்த பசுவின் உரிமையாளர் தீர்மானித்தார்.

அசம்பாவிதங்கள் நடந்த பிறகு நடவடிக்கைகள் எடுக்காது இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்துவார்கள்  என எதிர்பார்க்கின்றோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17