(பா.ருத்ரகுமார்)

இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை உத்தியோக பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகப்பூர்வ சஞ்சிகை உறுதிப்படுத்தியுள்ளது. 

அதன்படி ஐரோப்பிய சந்தை நடைமுறைக்குள் இன்று முதல் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அச் சஞ்சிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொண்டு இலங்கை மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவது குறித்து சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காத்திரமான முன்னேற்றங்கள் வேண்டும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மோசமடைந்திருந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவை தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டைநிறைவேற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சர்வதேசத்தை நிராகரித்து வந்ததை அடுத்து இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2010 ஆம் ஆண்டில் இரத்துச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.