லங்கா ரி10 சுப்பர் லீக்:  கோல் மார்வல்ஸ் அணியை வீழ்த்தி 2ஆம் இடத்தைப் பெற்றது ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ்

Published By: Vishnu

17 Dec, 2024 | 11:49 PM
image

(நெவில் அன்தனி)

ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணிக்கும் கோல் மார்வல்ஸ் அணிக்கும் இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) இரவு நடைபெற்ற மிகவும் இறுக்கமான லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்களால் ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியுடன் அங்குரார்ப்பண லங்கா ரி20 சுப்பர் லீக் கிரிக்கெட்டில் முதல் சுற்று நிறைவு பெற்றது.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் ஹம்பாந்தொட்ட பங்களா டைகர்ஸ் 9 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை அடைந்தது.

கோல் மார்வல்ஸ் 7 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது.

இன்று நடைபெற்ற கடைசி முதல் சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கோல் மார்வல்ஸ் அணி கடும் சிரமத்திற்கு மத்தியில் 10 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பங்களாதேஷ் வீரர் ஷக்கிப் அல் ஹசன் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 18 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை விட அலெக்ஸ் ஹேல்ஸ் (14) மட்டுமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சஹான் ஆராச்சிகே 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

83 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணி 9.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணி 6.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

ஆனால், மொஸாடெக் ஹொசெய்ன் 13 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் ஷெவன் டெனியல் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் பெற்றதுடன் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 27 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அவர்களை விட தசுன் ஷானக்க (19), மொஹம்மத் ஷாஸாத் (13) ஆகியோரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஜெவ்றி வெண்டசே 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பினுர பெர்னாண்டோ 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அங்குரார்ப்பண லங்கா ரி10 பிறீமியர் லீக்கின் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் ப்ளே ஓவ் சுற்று நாளை நடைபெறவுள்ளது.

ப்ளே ஓவ் சுற்றின் முதலாவது தகுதிகாண் போட்டியில் ஜெவ்னா டைட்டன்ஸ் அணியை ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணி சந்திக்கவுள்ளது.

அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள நீக்கல் போட்டியில் கோல் மார்வல்ஸ் அணியை கண்டி போல்ட்ஸ் அணி எதிர்த்தாடவுள்ளது.

முதல் போட்டியில் தோல்வி அடையும் அணியும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் அணியும் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் விளையாடும்.

முதலாவது தகுதிகாணிலும் இரண்டாவது தகுதிகாணிலும் வெற்றிபெறும் அணிகள் வியாழக்கிழமை (19) மாலை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-21 18:38:21
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04