லங்கா ரி10 சுப்பர் லீக் ப்ளே ஓவ் சுற்றில் கடைசி அணியாக கண்டி போல்ட்ஸ் இணைந்தது

Published By: Vishnu

17 Dec, 2024 | 11:07 PM
image

(நெவில் அன்தனி)

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) இரவு நடைபெற்ற நுவர எலிய கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓட்டங்களால் வெற்றிபெற்ற கண்டி போல்ட்ஸ் அணி, கடைசி அணியாக ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த கண்டி போல்ட்ஸ் அணி 10 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது.

பெத்தும் நிஸ்ஸன்க 41 ஓட்டங்களையும் ஷெஹான் ஜயசூரிய 33 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கசுன் ராஜித்த 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் லஹிரு மதுஷன்க 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நுவர எலிய கிங்ஸ் 10 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

கய்ல் மயர்ஸ், அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 21 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து எதிரணிக்கு கிளியை ஏற்படுத்தினர்.

கய்ல் மயர்ஸ் 15 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டறி, 5 சிக்ஸ்கள் உட்பட   36 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் நுவர எலிய கிங்ஸ் அணியின் ஆக்ரோஷம் அடங்கிப்போனது.

நுவர எலிய கிங்ஸ் அணியின் 5 விக்கெட்கள் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

ஒரு பக்கத்தில் திறமையாத் துடுப்பெடுத்தாடிய அவிஷ்க பெர்னாண்டோ 26 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ஆனால் கண்டி போல்ட்ஸ் அணி ப்ளே ஓவ் சுற்றுக்கு தகுதி பெறுவதை அவரால் தடுக்க முடியாமல் போனது.

பந்துவீச்சில் திசர பெரேரா 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அரினெஸ்டோ வேழா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட...

2025-03-25 15:08:56
news-image

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு...

2025-03-24 15:37:18
news-image

பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி...

2025-03-24 02:56:34
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான்...

2025-03-23 21:38:21
news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11