(நெவில் அன்தனி)
கண்டி பல்லேகலையில் நடைபெற்றுவரும் லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியிலிருந்து கலம்போ ஜகுவார்ஸ் அணியை துனித் வெல்லாலகேயின் துல்லியமான பந்துவீச்சும் குசல் மெண்டிஸின் அதிரடி துடுப்பாட்டமும் வெளியேற்றின.
இன்று நடைபெற்ற கடைசிக் கட்டப் போட்டியில் கலம்போ ஜகுவார்ஸ் அணியை எதிர்த்தாடிய ஜெவ்னா டைட்டன்ஸ் 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
இதன் மூலம் இந்த சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணி என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட ஜெவ்னா டைட்டன்ஸ், நாளை நடைபெறவுள்ள முதலாவது தகுதிகாண் போட்டியில் விளையாடவுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கலம்போ ஜகுவார்ஸ் 10 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்ளை மாத்திரம் பெற்றது.
ரமேஷ் மெண்டிஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 28 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட அசிப் அலி (18), கமிந்து மெண்டிஸ் (17), நஜிபுல்லா ஸத்ரான் (12) ஆகியோரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லஹிரு குமார 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா டைட்டன்ஸ் 5.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 100 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றியீட்டியது.
ஆரம்ப வீரர் கெவின் விக்ஹாம் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (2 - 1 விக்.)
ஆனால், குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.
குசல் மெண்டிஸ் 23 பந்துகளில் 11 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 79 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க ஒரு பவுண்டறி, ஒரு சிக்ஸ் உட்பட 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
குசல் மெண்டிஸ் குவித்த 79 ஓட்டங்களானது அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்பர் லீக்கில் தனி ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகப் பதிவானது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM