கடைநிலை ஆட்டக்காரர்களால் ஃபலோ ஒன்னைத் தவிர்த்தது இந்தியா

17 Dec, 2024 | 04:52 PM
image

 (நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைநிலை ஆட்டக்காரர்களின் பொறுப்புணர்வுடனான துடுப்பாட்டங்களால் ஃபலோ ஒன்னை (Follow on) இந்தியா தவிர்த்துக்கொண்டது.

பல தடவைகள் மழையினால் பாதிக்கப்பட்ட இப் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 445 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இந்தியா போட்டியின் நான்காம் நாளான இன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 51 ஓட்டங்களிலிருந்து  இந்தியா  தொடர்ந்தது.

ஒரு பக்கத்தில் விக்கெட்கள் வீழ்ந்துகொண்டிருக்க, மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கே.எல். ராகுல் 5ஆவது விக்கெட்டில் ரவிந்த்ர ஜடேஜாவுடன் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சற்று தைரியத்தைக் கொடுத்தார்.

ராகுல் 84 ஓட்டங்களையும் ஜடேஜா 76 ஓட்டங்களையும் பெற்றனர்.

மொத்த எண்ணிக்கை 213 ஓட்டங்களாக இருந்தபோது ஜடேஜா 9ஆவதாக ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக இந்தியா பலோன் ஒன் முறையில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், கடைநிலை வீரர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா (10 ஆ.இ.), ஆகாஷ் தீப் (27 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் பலோ ஒன்னைத் தவிர்த்தனர்.

பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலிய முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 445 ஓட்டங்களைக் குவித்தது.

ட்ரவிஸ் ஹெட் 152 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 101 ஒட்டங்களையும் அலெக்ஸ் கேரி 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 76 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

போட்டியில் ஒரு நாள் மாத்திரம் மீதம் இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி பெரும்பாலும் வெற்றிதோல்வியின்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20