யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோயினால் 99 பேர் பாதிப்பு

17 Dec, 2024 | 04:29 PM
image

யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

எலிக்காய்ச்சல் பரவல் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில்  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. இதுவரை யாழ். மாவட்டத்தில் இந்நோய் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காகத் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இதுவரை ஏறத்தாழ சுமார் 6,000 பேருக்குத் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும், பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ். மாவட்டத்திற்கு நாளை செவ்வாய்க்கிழமை (18) வருகை தரவுள்ளது என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைதான 14 இந்திய மீனவர்களுக்கும் தலா...

2025-02-19 16:33:31
news-image

அம்பாறை - வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் பகுதியில்...

2025-02-19 16:22:06
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 16:23:48
news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 16:41:25
news-image

பல பெண்களுக்கு வட்ஸ்அப் செயலியினூடாக ஆபாச...

2025-02-19 14:59:22
news-image

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஜீப்...

2025-02-19 14:25:20
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பின்னால்...

2025-02-19 14:24:32
news-image

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு ;...

2025-02-19 14:40:07
news-image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - இந்திய...

2025-02-19 13:24:22
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-19 14:59:24
news-image

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...

2025-02-19 12:47:30
news-image

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

2025-02-19 12:29:39