புதிய சபாநாயகர் பாராளுமன்றத்தின் கௌரவத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் ; திலித் ஜயவீர

17 Dec, 2024 | 07:08 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்கும் போது அவர்களின் கல்வி பட்டங்களை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சர்வஜன கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர சபையில் யோசனையை முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது,புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றும் போதே அவர் இந்த யோசனையை முன்வைத்தார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

புதிய சபாநாயகருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய சபாநாயகர் சுயாதீனமாக செயற்பட்டு பாராளுமன்றத்தின் கௌரவத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இதேவேளை யோசனை ஒன்றை முன்வைக்க எதிர்பார்க்கின்றேன். சபாநாயகர் தொடர்பான பிரச்சினை ஏற்படுவதற்கு காரணமாக இருந்த பின்னணி தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும். 

மற்றைய விடயங்களை கருத்திற்கொண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களுக்கு முன்னால் இருக்கும் கலாநிதி, பேராசிரியர், வைத்தியர் போன்ற தொழில் பட்டங்களை பயன்படுத்தி அழைப்பதை நீக்கினால் கீழ் நிலை அரசியலுக்கும் நல்லது. இல்லையென்றால் சமூகத்தில் இருந்து புறக்கணிப்பதை போன்றதாக அமையும்.

இங்கே பேராசிரியர் என்பது பல்கலைக்கழகத்திற்கும் வைத்தியர் என்பது வைத்தியசாலைக்கு பொருந்தும். ஆனால் பாராளுமன்றத்தில் பல்வேறு தொழில் துறைகளை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். 

இதனால் சபையில் ஒவ்வொருவரையும் அழைக்கும் போதும் பெயருக்கு முன்னால் இருக்கும் பகுதியை நீக்கினால் பொருத்தமாக இருக்கும் என்று யோசனையை முன்வைக்கின்றேன் என்றார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46