(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய தேவைப்பாடு மீண்டும் ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) புதிய சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ஜகத் விக்ரமரத்னவுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு, மக்களுக்கு மேலும் உகந்த சேவையை வழங்கும் பயணத்தில் சபாநாயகருக்கு தனித்துவமான வகிபங்கு இருக்கிறது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்கு தரமான சேவையை வழங்குவதில் சபாநாயகரின் பங்களிப்பு தனித்துவமானது.
சகல உறுப்பினர்களினதும் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் வேறுபாடின்றி கேட்பதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காளராக சபாநாயகர் மாறுகிறார். எனவே புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிர்க்கட்சி சார்ப்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேநேரம் முன்னாள் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர எமக்கு நடவடி்கை எடுக்க வேண்டி ஏற்பட்டது. அவ்வாறு நடந்து கொள்ளாது சபாநாயகர் தனது பணியை சிறப்பாக முன்னெடுக்குமாறும், மீண்டும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய தேவைப்பாடு மீண்டும் எமக்கு ஏற்படக்கூடாது என பிரார்த்திக்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM