(நெவில் அன்தனி)
டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டிலிரந்து நியூஸிலாந்து அணியின் வேகபந்துவீச்சாளர் 36 வயதுடைய டிம் சௌதீ ஓய்வு பெற்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக ஹெமில்டன், சிடொன் பார்க் விளையாட்டரங்கில் இன்றைய தினம் 423 ஓட்டங்களால் நியூஸிலாந்து ஈட்டிய வெற்றியுடன் டிம் சௌதீ விடைபெற்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப் போவதாக டிம் சௌதீ ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஒய்வுபெற்ற டிம் சௌதீக்கு, நியூஸிலாந்தின் கிரிக்கெட் விற்பன்னர் ரிச்சர்ட் ஹட்லி நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்ததுடன் சக வீரர்கள் அவரை வாழ்த்தி விடைகொடுத்தனர்.
இங்கிலாந்துக்கு எதிராக நேப்பியரில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் பெற்ற டிம் சௌதீ, அதே அணிக்கு எதிரான போட்டியுடன் விடைபெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
19 வயது வீரராக அறிமுகப் போட்டியில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த டிம் சௌதீ, இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 77 ஓட்டங்களைக் குவித்து தான் ஒரு சகலதுறை வீரர் என்பதை உணர்த்தியிருந்தார்.
107 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய டிம் சௌதீ, மொத்தமாக 391 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
நியூஸிலாந்து சார்பாக அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் 431 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருக்கும் றிச்சர்ட் ஹட்லிக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் டிம் சௌதீ இருக்கிறார்.
15 தடவைகள் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்துள்ள அவர், ஒரு தடவை மாத்திரமே போட்டி ஒன்றில் 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் 2012இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டிம் சௌதீ 64 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி தனது அதிசிறந்த இன்னிங்ஸ் பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.
ஒரு வருடம் கழித்து லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் 108 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களைக் கைப்பற்றினார். அதுவே டெஸ்ட் போட்டி ஒன்றில் அவர் பதிவுசெய்த அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.
அவர் விளையாடிய 107 டெஸ்ட் போட்டிகளில் 47 வெற்றிகளை ஈட்டியுள்ளார். இதன் மூலம் நியூஸிலாந்து சார்பாக அதிக வெற்றிகளை ஈட்டிய டெஸ்ட் வீரர் என்ற பெருமையை டிம் சௌதீ தனதாக்கிக்கொண்டுள்ளார். ரொஸ் டெய்லர், டொம் லெதம், கேன் வில்லியம்சன் ஆகியோர் தலா 44 வெற்றிகளை ஈட்டி இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
துடுப்பாட்டத்திலும் அவர் திறமையை வெளிப்படுத்த தவறவில்லை.
156 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய அவர் 7 அரைச் சதங்களுடன் 2245 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM