ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முப்படையினரை கௌவரப்படுத்தும் நிகழ்வு இன்று பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வினை முன்னிட்டு இன்று விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இதற்கமைவாக பொல்துவ சந்தியில் பத்தரமுல்ல சந்திக்கு வந்து பன்னிப்பிட்டி வீதியின் ஊடாக பெல்வத்த தலவதுகொட ஊடாக  கிம்வுலாவல புதிய வைத்தியசாலை வரையிலும் பயணிக்க முடியும். கிம்புலாவல சந்தியிலிருந்து தலவதுகொட ஊடாக பன்னிப்பிட்டிய வீதியில் பெலவத்த ஊடாக பாலம துன சந்தியில் பிரவேசிக்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிகழ்வில் முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த படையினரின் உறவினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.