முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து ; ஒருவர் பலி ; பெண் காயம்

17 Dec, 2024 | 12:04 PM
image

வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வில்லியம் ஹேகித்த வீதியில் மின்சார சபை அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (16) மாலை இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்குளியிலிருந்து ஹேகித்த நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த பெண்ணும் படுகாயமடைந்துள்ள நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவர் ஆவார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு...

2026-05-21 16:47:41
news-image

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டுக்கான சிறுபோக...

2026-05-21 16:52:26
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும்...

2026-05-21 16:51:04
news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 16:40:19
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40