(நெவில் அன்தனி)
கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட்டின் இறுதிச் சுற்றில் விளையாட மேலும் இரண்டு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இச் சுற்றுப் போட்டியில் முதலாவது அணியாக ஜெவ்னா டைட்டன்ஸ் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்ற நிலையில், இன்று நடைபெறவிருந்த 3 போட்டிகளும் மழையினால் கைவிடப்பட்டதால் ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ், கோல் மார்வல்ஸ் ஆகிய அணிகளும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஜெவ்னா டைட்டன்ஸ் 4 வெற்றிகள், 2 முடிவில்லாத பெறுபேறுகள் ஆகியவற்றடன் 10 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கிறது.
ஹாம்பந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணியும் கோல் மார்வல்ஸ் அணியும் தலா 2 வெற்றிகள், ஒரு தொல்வி, 3 முடிவில்லா பெறுபேறுகள் ஆகியவற்றுடன் தலா 7 புள்ளிகளைப் பெற்று நிகர ஓட்ட வேக அடிப்படையில் முறையே 2ஆம், 3ஆம் இடங்களில் இருக்கின்றன.
இதுவரை ஒரு போட்டியிலும் வெற்றபெறாததுடன் தலா 2 தோல்விகள், 4 முடிவில்லா பெறுபேறுகளுடன் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ள கலம்போ ஜகுவார்ஸ், கண்டி போல்ட்ஸ், நுவர எலிய கிங்ஸ் ஆகிய 3 அணிகளும் முறையே 4ஆம், 5ஆம், 6ஆம் இடங்களில் இருக்கின்றன.
இந்த மூன்று அணிகள் சம்பந்தப்பட்ட கடைசிப் போட்டி முடிவுகளிலேயே எந்த அணி இறுதிச் சுற்றுக்கு செல்லும் நான்காவது அணி என்பது தீர்மானிக்கப்படும். ஒருவேளை இந்த 3 அணிகள் சம்பந்தப்பட்ட 3 போட்டிகளும் சீரற்ற காலநிலையால் விளையாடப்படாவிட்டால் கலம்போ ஜகுவார்ஸ் அணிக்கு சாதகமான முடிவு கிடைக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM