தலைமன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை : தடுப்பு காவலில் இருந்து தப்பிச் சென்றவர் 6 மாதங்களின் பின் கைது !

16 Dec, 2024 | 05:43 PM
image

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த  பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேககபர் தடுப்பிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் மீண்டும்  கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,  

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படிருந்த நிலையில் அவர் தப்பிச் சென்றுள்ளார். 

தப்பிச் சென்ற சந்தேகநபர் நேற்று  ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் மீண்டும் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

தலைமன்னார்  பொலிஸார் தடுத்து வைத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இன்று  திங்கட்கிழமை (16) காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பிண்ணனி

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி மாலை காணாமல் போன அக்கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி தனது அம்மம்மாவின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள தென்னந் தோப்பில் இருந்து  சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் மீதான பரிசோதனையின் போது குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

குறித்த கொலை தொடர்பாக தோட்டத்தில் வேலை செய்த  55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

இந்நிலையில், சந்தேகநபர் கடந்த மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வேளை, வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றார். 

கடந்த 6 மாதங்களாக குறித்த நபர் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15)  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21