ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

Published By: Digital Desk 2

16 Dec, 2024 | 05:22 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

'டாடா 'எனும் வெற்றி படத்தினை இயக்கிய இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ஜெயம் ரவி கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் புதுமுக நடிகை டௌதி ஜிவால், சக்தி வாசு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஃபேமிலி வித் எக்சன் என்டர்டெய்னராக இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'அகிலன்', 'பிரதர் : ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாததால் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. இந்த திரைப்படத்தை இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்குவதாலும், தமிழகத்தின் காவல்துறை ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவாலின் வாரிசான டௌதி ஜிவால் ஜீவா கதையின் நாயகியாக அறிமுகமாவதாலும் இப்படம் வெற்றி பெறும் என அவதானிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00
news-image

நடிகர் தேஜஷ் ராஜன் நடிக்கும் 'அமரம்'...

2026-05-07 14:38:54
news-image

சிவ கார்த்திகேயனுடன் இணைந்த பாக்யஸ்ரீ

2026-05-06 18:40:52
news-image

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி கார் விபத்தில்...

2026-05-06 05:20:33
news-image

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'பாலன்...

2026-05-05 18:01:45
news-image

ஜூன் மாதம் வெளியாகும் ராம் சரணின்...

2026-05-02 16:32:22
news-image

நடிகர் ஜெயராம் - ஊர்வசி இணைந்து...

2026-05-02 16:01:58
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நடிகர்...

2026-05-02 16:01:07
news-image

நடிகர் விதார்த் நடிக்கும் 'மூன்றாம் கண்'...

2026-05-02 15:57:57
news-image

நடிகர் விஜய் அண்டனி நடிக்கும் 'நூறு...

2026-05-02 15:48:59
news-image

நடிகர் பாரத் நடிக்கும் 'காவியக் காதல்'...

2026-05-02 15:48:18