நடிகர் வெற்றி நடிக்கும் 'ஹீலர்'

Published By: Digital Desk 2

16 Dec, 2024 | 05:19 PM
image

'எட்டு தோட்டாக்கள்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த யதார்த்த நடிகர் வெற்றி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஹீலர்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் தனுஷ் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் 'ஹீலர் ' எனும் திரைப்படத்தில் வெற்றி, ராதிகா ப்ரீத்தி, அபிநயா ,வினோத் சாகர், இயக்குநரும், நடிகருமான பேரரசு, பழ. கருப்பையா, சரண் ராஜ் , கூல் சுரேஷ், சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.  இளையராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜுபின் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை டி ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சத்தியவதி அன்பழகன் மற்றும் தனுஷ் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது.

நடிகர் வெற்றி கதை தெரிவு விடயங்களில் தீவிர கவனம் செலுத்துவதாலும் இந்த திரைப்படத்திற்கு 'ஹீலர் 'என பெயரிடப்பட்டிருப்பதாலும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தற்போதே அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்