பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் தப்பியோட்டம் !

Published By: Digital Desk 2

16 Dec, 2024 | 01:48 PM
image

அநுராதபுரம் மாவட்டம், தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைரேகைகளை பெற்றுக் கொள்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட போது பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

தலாவ கம்பிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றை உடைத்து சொத்துக்களை திருடிய சம்பவம் தொடர்பில் கடந்த 12ஆம் திகதி தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தலாவ பொலிஸ் உத்தியோகத்தர் குழுவினால் கடந்த சனிக்கிழமை (14) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில, கைரேகைகளை பெற்றுக் கொள்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட போது பொலிஸ் அதிகாரிகளை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56
news-image

சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில்...

2025-02-15 15:38:56
news-image

புறக்கோட்டையில் ஐஸ், கொக்கெய்ன் போதைப்பொருட்களுடன் இளைஞன்...

2025-02-15 15:41:26
news-image

மாணவர்கள் இடைவிலகாத, கைவிடப்படாத கல்வி முறைமையை...

2025-02-15 14:45:49
news-image

பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு ;...

2025-02-15 14:55:14
news-image

பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில்...

2025-02-15 14:47:14