முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்ய விசேடபொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நேரடி கண்காணிப்பின் கீழ் பொலிஸ் மா அதிபர் அலுவலக பிரதானி பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் மேற்பார்வையில் பொலிஸ் தலைமையகத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் உத்தரவிற்கு அமைவாக இக்குழு பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான பாணந்துறை பழைய பசார் வீதியிலுள்ள பள்ளிவாசல், வெல்லம்பிட்டி கொஹிலவத்த ஜும்மா பள்ளிவாசல் ஆகியவை தொடர்பில் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இன,மத நல்லிணக்கத்தை சீர் குழைக்கும் திட்டமிட்ட குழுவொன்று இவ்வாறான நடவடிக்கைகளின் பின்னணியிலிருந்து செயற்படுவது ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி கேசரிக்கு தெரிவித்தார்.
அதன்படியே பொலிஸ் தலைமையகத்தின் சிறப்பு பொலிஸ் பிரிவொன்று சம்பவம் இடம்பெற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று முதல் அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மேற்படி பள்ளிவாசள்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் நள்ளிரவு 1 மணிக்கு வெல்லம்பிட்டி பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதலும் பாணந்துறை பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM