(நெவில் அன்தனி)
கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட் அத்தியாயத்தில் கோல் மார்வல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ஸஹூர் கான் முதலாவது ஹெட் - ட்ரிக்கை பதிவுசெய்து வரலாறு படைத்தார்.
அப் போட்டியில் கலம்போ ஜகுவார்ஸ் அணியை 7 விக்கெட்களால் கோல் மார்வல்ஸ் இலகுவாக வெற்றிகொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கலம்போ ஜகுவார்ஸ் அணி 10 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
கலம்போ ஜகுவார்ஸ் அணியின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.
மஹீஷ் தீக்ஷனவின் முதல் ஓவரிலேயே ஜேசன் ரோய் (0), கமிந்து மெண்டிஸ் (0) ஆகிய இருவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழக்க கலம்போ ஜகுவார்ஸ் தடுமாற்றம் அடைந்தது.
டான் லோரன்ஸ் (22), நஜிபுல்லா ஸத்ரான் (26) ஆகிய இருவரும் அணியை சீர் செய்ய முயற்சித்தனர். எனினும் அவர்கள் ஆட்டம் இழந்த பின்னர் ஏனையவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கையுடன் ஆட்டம் இழந்தனர்.
நஜிபுல்லா ஸ்தரானின் விக்கெட்டை வீழ்த்திய ஸஹூர் கான், தனது இரண்டாவது ஓவரில் ஹெட் - ட்ரிக் முறையில் ஏஞ்சலோ மெத்யூஸ், சதீர சமரவிக்ரம, மதீஷ பத்திரண ஆகியோரை ஆட்டம் இழக்கச் செய்து வரலாறு படைத்தார்.
ஸஹூர் கான் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜெவ்றி வெண்டசே 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் மார்வல்ஸ் 7.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 83 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அலெக்ஸ் ஹேல்ஸ் 38 ஓட்டங்களையும் தடையிலிருந்து மீண்டு வந்த நிரோஷன் திக்வெல்ல 20 ஓட்டங்களையும் பெற்றதுடன் ஆரம்ப விக்கெட்டில் 26 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பந்துவீச்சில் கமிந்து மெண்டிஸ் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM