ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 

Published By: Vishnu

15 Dec, 2024 | 10:46 PM
image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பின் போது இலங்கையின் சுற்றுலாத்துறை, முதலீடு மற்றும் விவசாயத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, கடற்றொழில் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாடு ,தனித்துவமான துறைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் , இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு  ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் உள்ளிட்டவர்களை இன்று (15 ) இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு  வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் -...

2025-02-13 08:49:04
news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25