பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சிக்கி காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிலியந்தலை பகுதியில் போதைப்பொருள் சுற்றி வளைப்பொன்றுக்குச் சென்ற பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் மீது முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார்.
அத்துடன் சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ உள்ளிட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிறுவர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று சிவிலியன்களும் காயமடைந்து களுபோவில - கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் பிலியந்தலை மக்கள் வங்கிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளான (4946) அபேவிக்ரம உயிரிழந்தார் எனவும் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் (67055) சமிந்த காயமடைந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்திருந்தார்.
இதனைவிட காயமடைந்தவர்களில் 11 வயதான சிறுமி ஒருத்தியும் 15 வயதான சிறுவன் ஒருவனும் மற்றொரு சிவிலியனும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ள நிலையில் 11 வயது சிறுமியின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக களுபோவில வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்திருந்த நிலையில் குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM