யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கரவெட்டி - தில்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை (14) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இளைஞனுக்கு எலிக்காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் காணப்பட்டதாகவும், இளைஞனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், பரிசோதனை முடிவிலேயே எலிக்காய்ச்சலா என்பதனை உறுதிப்படுத்த முடியும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களில் காய்ச்சல் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் முல்லைத்தீவை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று உயிரிழந்த இளைஞனுடன் உயிரிழப்பு 8ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை உயிரிழந்த மூவருக்கு எலிக்காய்ச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை யாழில் சுமார் 70 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM