(ஆர்.யசி)
மக்கள் பலம் அரசாங்கதின் பக்கம் உள்ளதென்றால் உடனடியாக தேர்தலை நடத்திக் காட்டுங்கள், எமக்கு அஞ்சுவதால் தான் தேர்தலை பிற்போட்டு வருகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் தந்தையான காலம் சென்ற எட்வின் த சொய்சாவின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தச் சென்றவேளையிலேயே முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்கு இந்த கருத்தினை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணசபைகளை கலைக்க வேண்டிய நேரம் இதுவே. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூன்று மாகாணசபைகளை கலைக்க வேண்டும்.
தேர்தலை நடத்தினால் நாங்கள் வெற்றி பெறுவோம் என அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வருகின்ற போதிலும் தேர்தலை நடத்த அஞ்சிகின்றனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட அவர்கள் நடத்த முடியாது தடுமாறுகின்றனர். மக்கள் பலம் எந்த பக்கம் என்பதை அறிந்துள்ள நிலையில் தேர்தலை நடத்தினால் நிலைமைகள் மாறும் என்பதற்கு அமையவே தேர்தலை பிற்போட்டு வருகின்றனர்.
ஆகவே தேர்தலை நடத்திக் காட்டுங்கள் என நாம் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றோம். அதேபோல் ஜனநாயகம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஜனநாயகத்தை முழுமையாக மீறி செயட்பட்டுப் வருகின்றனர். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. ஆர்ப்பாட்டங்கள் தடுக்கப்படுகின்றது. எம்மை இராணுவ ஆட்சியாளர் என கூறிக்கொண்டு இன்று இராணுவ ஆட்சியை நடத்தி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM