இந்தோனேஷியாவின் தலைநகரான  ஜகார்த்தாவில் 6 குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இதில் இலங்கையர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என இந்தோனேஷியாவில் உள்ள இலங்கைக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.