தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையை வழிநடத்திச் செல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம் 'எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் என். சங்கர் தயாள் இயக்கத்தில் உருவாகி வரும் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம் ' எனும் திரைப்படத்தில் யோகி பாபு , செந்தில் , 'பருத்திவீரன்' சரவணன், இமய வர்மன், அத்வைத் , ஜெய் மஸ்தான், ஹரிகா, பவாஸ் ,இயக்குநர் மூர்த்தி, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஜெ. லட்சுமணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'சாதக பறவைகள்' சங்கர் மற்றும் ஜான் ராபின்ஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
வளரிளம் பருவத்து பிள்ளைகளுக்கு தேர்தல் அரசியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மீனாட்சி அம்மன் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்குமார் சம்பந்தம் தயாரித்திருக்கிறார்.
விரைவில் படமாளிகைகளில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தனியார் பாடசாலையில் பயிலும் மாணவ மாணவிகள் பாடசாலையில் நடைபெறும் மாணவ பேரவைக்கான தேர்தல் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதும்... இது தொடர்பாக பெற்றோர்கள் - ஆசிரியர்கள்- அரசியல்வாதிகள்- தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதும்... படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM