போலியான கல்வித் தகைமை ; அசோக்க ரன்வலவுக்கு எதிரான நடவடிக்கை என்ன? - சாகர காரியவசம்

14 Dec, 2024 | 05:46 PM
image

(இராஜதுரை  ஹஷான்)

போலியான கல்வித் தகைமையை குறிப்பிட்டுக்கொண்டு ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி, பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வலவுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்னவென்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகத்தை மக்கள் வெகுவிரைவில் விளங்கிக்கொள்வார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

சபாநாயகர் பதவியை அசோக்க ரன்வல இராஜினாமா செய்தமை குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தது வரவேற்கத்தக்கது. 

போலியான கல்வித் தகைமையை சமர்ப்பித்து, சபாநாயகராக பதவி வகித்ததன் பின்னர் உண்மை வெளிவந்ததை தொடர்ந்து ஏற்பட்ட கடும் சர்ச்சையால் சபாநாயகர் பதவி விலகினார்.

போலியான கல்வி தகைமையை காண்பித்து ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய அசோக்க ரன்வலவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

போலியான வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.அவர்கள் குறிப்பிட்ட விடயங்கள் அவர்களுக்கே எதிரானதாக அமையும். நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக நிறைவேற்ற வேண்டும்.

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அரசாங்கத்தின் தவறை சுட்டிக்காட்டும் பலமிக்க எதிர்க்கட்சியாக நாங்கள் செயற்படுவோம். 

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் பிரதான அரசியல் கட்சியாக மீண்டும் எழுச்சிப் பெறுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரயில் மோதி வேன் விபத்து -...

2025-02-14 13:01:44
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-14 12:41:02
news-image

மதுபானசாலையை இடமாற்றக் கோரி பூநகரி பிரதேச...

2025-02-14 12:55:44
news-image

வரக்காபொலயில் லொறி - டிப்பர் வாகனம்...

2025-02-14 12:51:04
news-image

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ!; காலாவதியான தீயணைப்புக்...

2025-02-14 12:50:11
news-image

மீகஸ்வெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர்...

2025-02-14 12:48:22
news-image

லசந்த படுகொலை விவகாரத்தை சட்டமா அதிபர்...

2025-02-14 12:00:12
news-image

போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை ;...

2025-02-14 12:13:46
news-image

கஞ்சா செடிகள், துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது...

2025-02-14 12:33:08
news-image

கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2025-02-14 12:24:21
news-image

வவுனியா, கிளிநொச்சி மாவட்டத்துக்கான உலக உணவுத்...

2025-02-14 12:23:16
news-image

நாமல் ராஜபக்ஷவின் சட்டப்படிப்பு குறித்து விசாரணை...

2025-02-14 11:35:50