எம்மில் பலரும் வெற்றி பெறுவதற்கான சூத்திரங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. பொதுவாகவே வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கான வெற்றி சூத்திரத்தை மிக எளிமையாகவே அடையாளம் காண்கிறார்கள். அதாவது ஒருவருடனான சந்திப்பின்போது அவர்களின் பேச்சை மட்டும் கவனிப்பதில்லை. அவர்களின் அனைத்து செயல்பாட்டையும் துல்லியமாக அவதானிக்கிறார்கள். அதில் தங்களுக்கான வெற்றிக்குரிய விடயத்தை கண்டெடுக்கிறார்கள்.
பொதுவாகவே எம்மில் பலரும் தங்களின் காரியம் நிறைவேற வேண்டும் என்றால் குறிப்பாக அரசாங்கம் தொடர்பான காரியம் ஈடேற வேண்டும் என்றால் அரசு அதிகாரிகளை குறிப்பிட்ட தருணத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட திகதியில் குறிப்பிட்ட கிழமையில் குறிப்பிட்ட திசையில் சந்தித்து பேசுவதை வழக்க படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதன் பின்னணியில் உங்களின் வெற்றியை நிர்ணயிக்கும் ஓரை எனும் சூத்திரமும் அடங்கி இருக்கும். அதே தருணத்தில் அவர்கள் தங்களுடன் சில விசேடமான பொருட்களை உடன் வைத்திருப்பதையும் கவனித்திருக்கலாம். இதே போன்றதொரு அணுகுமுறையை நீங்களும் கையாண்டால் நீங்களும் வெற்றிகரமான சாதனையாளராக உயரலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்: வெற்றிலை, கிராம்பு, ஏலக்காய்.
நீங்கள் உங்களுடைய வணிகத்தை விரிவுபடுத்துவதற்காகவோ அல்லது புதிய வியாபாரத்தை தொடங்குவதற்காக நிதி உதவி அளிக்கும் நபர்களை சந்திக்க செல்வதற்கு முன்னரோ மேலே குறிப்பிடப்பட்ட பொருட்களை அதாவது முனை மழுங்காத பெண் வெற்றிலையாக அதாவது காம்புகள் இரண்டும் ஒன்றாக இணைந்திருக்கும் பெண் வெற்றிலையாக ஒரு வெற்றிலையை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
இதனுடன் இரண்டு கிராம்பு மற்றும் மூன்று ஏலக்காயை வைத்து மடக்கி, அதனை உங்களுடைய சட்டை பையின் உள்பகுதியில் அல்லது சட்டைக்குள் வைத்திருங்கள். நீங்கள் சந்திக்கும் நபருடன் பேச தொடங்கும் முன் உங்களது சட்டைப் பையில் இருக்கும் வெற்றிலை+ கிராம்பு+ ஏலக்காய் + ஆகிய மூன்றையும் ஒரு முறை தொட்டுக்கொண்ட பிறகு பேச்சுவார்த்தையை தொடங்குங்கள்.
நீங்கள் நினைத்ததை உறுதியாகவும் , நிதானமாகவும், இயல்பாகவும், அழுத்தமாகவும் பேசுங்கள். உங்கள் பேச்சில் நம்பிக்கை - லாபம் ஆகியவை கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துங்கள். அதன் பிறகு உங்களது பேச்சு வார்த்தை வெற்றிகரமாக நிறைவடைவதை அனுபவத்தில் காணலாம். மேலும் நீங்கள் நினைத்த காரியத்தை காரியத்தில் வெற்றி பெறுவதையும் அனுபவத்தில் உணரலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM