கொழும்பில் தற்போது கடுமையான புயல் காற்றுடன் மழை பெய்து வருகின்றது.

குறிப்பாக மேல் மாகாணத்தில் கடுமையான மழை பெய்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீதிகளில் மிக குறுகிய நேரத்துக்குள் நீர் நிறைந்துள்ளமையால் வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.