உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு குறிவைத்து 3ஆவது டெஸ்டை எதிகொள்ளும் இந்தியா - அவுஸ்திரேலியா

Published By: Vishnu

13 Dec, 2024 | 11:24 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 5 போடடிகள் கொண்ட போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டி பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது.

பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா 295 ஓட்டங்களாலும் அடிலெய்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா 10 விக்கெட்களாலும் வெற்றி பெற்றதை அடுத்து தொடர் 1 - 1 என சம நிலையில் இருக்கிறது.

இரண்டு அணிகளும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒன்றையொன்று வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏனெனில், போர்டர் - காவஸ்கர் தொடருக்கும் அப்பால், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற வேண்டும் என்பதை குறிவைத்து இரண்டு அணிகளும் விளையாடும் என்பது உறுதி.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நோக்கிய பயணம் பாதிக்கும் என்பதை இரண்டு அணிகளும் நன்கு அறிந்த நிலையிலேயே இந்த டெஸ்ட் போட்டியை எதிர்கொள்கின்றன.

இதன் காரணமாக இந்த டெஸ்ட் போட்டி மற்றொரு பரபரப்பான போட்டியாக அமையும் என்பது நிச்சயம்.

எவ்வாறாயினும் இரண்டு அணிகளிலும் ஓரிரு துடுப்பாட்ட வீரர்களே பிரகாசித்துள்ளதுடன் சிரேஷ்ட வீரர்கள் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளதைக் கடந்த போட்டிகளில் காணமுடிந்தது.

அவுஸ்திரேலிய அணியில் ட்ரவிஸ் ஹெட் மாத்திரமே துடுப்பாட்டத்தில் பிரகாசித்துள்ளதுடன் இந்திய அணியில் நிட்டிஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜய்ஸ்வால் ஆகிய இருவரும் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

விராத் கோஹ்லி, கே. எல். ராகுல் ஆகியோரும் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

ரோஹித் ஷார்மா 2ஆவது போட்டியின் மூலம் தொடரில் இணைந்துகொண்ட போதிலும் மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய அவரால் கணிசமான ஓட்டங்களைப் பெற முடியாமல் போனது.

அவர் மீண்டும் ஆரம்ப வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் இரண்டு அணிகளிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டுள்ளதை அவர்களது பந்துவீச்சுப் பெறுதிகள் எடுத்துக்காட்டுகின்றன.

மிச்செல் ஸ்டார்க் 11 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 10 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்திய பந்துவீச்சிலும் வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா (12), மொஹமத் சிராஜ் (9) ஆகிய இருவரே முன்னிலையில் இருக்கின்றனர்.

அவுஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மானுஸ் லபுஷேன் ஆகியோரும் இந்திய அணியில் விராத் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில் ஆகியோரும் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

பிறிஸ்பேன் கபா விளையாடரங்கில் அவுஸ்திரேலியா விளையாடியுள்ள 66 டெஸ்ட் போட்டிகளில் 42இல் வெற்றிபெற்றுள்ளதுடன் 10இல் மாத்திரமே தோல்வி அடைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்தியா விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

எவ்வாறாயினும் இரண்டு அணிகளுக்கும் இடையில் இந்த மைதானத்தில் கடைசியாக 2021இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

அணிகள்

இந்தியா: யஷஸ்வி ஜய்ஸ்வால், ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், கே.எல். ராகுல், நிட்டிஷ் குமார் ரெட்டி, வொஷிங்டன் சுந்தர் அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், மொஹமத் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா.

அவுஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, நேதன் மெக்ஸ்வீனி, மானுஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட், மிச்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பெட் கமின்ஸ் (தலைவர்), மிச்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜொஷ் ஹேஸ்ல்வூட்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42
news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08