(நெவில் அன்தனி)
தாய்லாந்தின் சியாங் மாய் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய உயரடுக்கு குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 51 கிலோ கிராம் எடைப்பிரிவில் வென்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்த பசிந்து உமயங்கன மிஹிரன் நாடு திரும்பியபோது அவருக்கு விமான நிலையத்தில் வைத்து சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
குவைத் நகரில் 1987இல் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் பி.எல்.ஜே. ரட்னசிறி வெண்கலப் பதக்கம் வென்று 37 வருடங்கள் கடந்த நிலையில் ஆசிய குத்துச் சண்டையில் இலங்கைக்கு பதக்கம் கிடைத்தது இதுவே முதல் தடவையாகும்.
கால் இறுதிப் போட்டியில் நேரடியாக பங்குபற்ற தகுதிபெற்ற மிஹிரன் அப் போட்டியில் மலேசியாவின் முதல் நிலை வீரரும் 22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்றவருமான மொஹமத் அப்துல் கய்யும் பின் ஆரிபின் என்பவரை வெற்றிகொண்டதன் மூலம் பதக்கம் ஒன்றை உறுதி செய்துகொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து 22 வயதுக்குட்பட்ட ஆசிய சம்பியன் ஆசில்பெக் ஜாலிலோவ் (உஸ்பெகிஸ்தான்) என்பவரை கடந்த ஞாயிற்றக்கிழமை நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் எதிர்கொண்ட உமயங்கன மிஹிரன் புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைய நேரிட்டது.
மூன்று சுற்றுகளைக் கொண்ட அப் போட்டியில் முறையே 9 - 10, 9 - 10, 9 - 10 என மத்தியஸ்தர்கள் வழங்கிய புள்ளிகள் அடிப்படையில் 27 - 30 என மிஹிரன் தோல்வி அடைய நேரிட்டது.
ஆனால், அப் போட்டியில் ஜாலிலோவுக்கு கடும் சவாலாக மிஹிரன் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய உயரடுக்கு குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற மிஹிரன், ஏனைய இலங்கை வீரர்களுடன் இன்று நாடு திரும்பினார்.
அப்போது விமான நிலையத்தில் அவருக்கு விசேட வரவேற்பளிக்கப்பட்டது.
குத்துச்சண்டை சங்க பிரதிநிதிகளும் மிஹிரனின் பெற்றொரும் இளைய சகோதரரும் மிஹிரனை வரவெற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM