(இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவா 116 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.
அரசியல் பழிவாங்களுக்காகவே பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பினை அரசாங்கம் சடுதியாக குறைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிமித்தம் சேவையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களில் 116 பேர் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலை புலிகள் காலத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்தவர்கள் இவ்வாறு சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் எண்ணக்கரு நாட்டில் இன்றும் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறு பாதுகாப்பினை குறைப்பது முறையற்றது.
மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்வதற்காவா அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM